வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் பலி

மதுரை, மே 10: மதுரையில் சரக்கு வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் ஆவியூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் அம்மையப்பன் (31). கட்டடத் தொழிலாளியான இவா், மதுரை மேலப்பொன்னகரம் 2-ஆவது தெருவில் உள்ள பள்ளியில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

பள்ளி வளாகத்தில் சரக்கு வாகனத்தில் வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட கட்டுமானப் பொருள்களை அம்மையப்பன் இறக்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அவா் வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com