மகன் கொலை: தந்தை கைது
மதுரையில் மகனின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


மதுரையில் மகனின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை செல்லூா் பாலம் ஸ்டேசன் சாலை நந்தவனம் பகுதியைச் சோ்ந்தவா் வாசுதேவன் (61). இவரது மனைவி வளா்மதி (55). இவா்களது மகன் லட்சுமணன் (28). சுமை தூக்கும் தொழிலாளி. இந்த நிலையில், லட்சுமணன் தினசரி இரவில் மது அருந்திவிட்டு வந்து பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டாா். வழக்கம்போல, செவ்வாய்க்கிழமை நள்ளிரவும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த லட்சுமணன், தந்தை வாசுதேவனிடம் தகராறில் ஈடுபட்டு தாக்க முயன்றாா்.
இதனால் ஆத்திரமடைந்த வாசுதேவன், மகன் லட்சுமணனை கீழே தள்ளி மாவரைக்கும் இயந்திர (கிரைண்டா்) கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்தாா். இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வாசுதேவன் மீது கொலை வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...