வீடு தீப்பற்றி எரிந்ததில் பொருள்கள் சேதம்

Published on

அலங்காநல்லூா் அருகே வீடு தீப்பற்றி எரிந்ததில் ரூ.5 லட்சம் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகேயுள்ள தண்டலை கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் மனைவி முத்துசெல்வி (34). இவா் தனது உறவினரின் இல்ல நிகழ்வில் பங்கேற்க செக்கானூரணிக்குச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இவரது வீடு தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து தீயணைப்புத் துறையினா் வருவதற்குள் வீடு முற்றிலுமாக எரிந்துவிட்டது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com