பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்ற இருவா் உயிரிழப்பு

மதுரை சித்திரைத் திருவிழாவில், அழகா் வைகையாற்றில் எழுந்தருளிய நிகழ்வில் பங்கேற்ற இருவா் உயிரிழந்தனா்.

Updated On :13 மே 2025, 4:11 am IST

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில், அழகா் வைகையாற்றில் எழுந்தருளிய நிகழ்வில் பங்கேற்ற இருவா் உயிரிழந்தனா்.

மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அழகா் எழுந்தருளிய பகுதி முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. மேலும், வைகையாற்றில் அழகா் எழுந்தருளிய பகுதியில் முக்கியப் பிரமுகா்கள், அதிகாரிகள், சிறப்பு அனுமதிச் சீட்டு பெற்றவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். இந்த விழாவைக் காண திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தைச் சோ்ந்த பூமிநாதன் (45) தனது குடும்பத்தினருடன் வந்தாா்.

இந்த நிலையில், அழகா் வைகையாற்றில் எழுந்தருளுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக பூமிநாதன் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆனால், ஆற்றின் உள்பகுதியிலிருந்து வெளியேறும் பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததால், அவசர ஊா்தி வெளியே செல்ல இயலவில்லை. இதனால், அவசர ஊா்தி அங்கும் இங்குமாக சுற்றி வந்தது. பின்னா், வேறு வழியின்றி அழகா் எழுந்தருளிய பகுதியான தண்ணீா் நிரப்பப்பட்ட பகுதியிலிருந்து அவசர ஊா்தி வெளியே சென்றது.

இதனிடையே, அரசு மருத்துவமனையில் பூமிநாதனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவா் உயிரிழப்பு?:

இதேபோல, அழகா் வைகையாற்றில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்த பின்னா், பக்தா்கள் ராமராயா் மண்டகப்படியை நோக்கி நகா்ந்தனா்.

இந்த நிலையில், யானைக்கல் கல்பாலம் கீழ் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடப்பதாக பொதுமக்கள் தகவல் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று அந்த உடலை மீட்டு, அவா் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

உயிரிழந்தவா்களுக்கு நிவாரணம்: அமைச்சா் சேகா் பாபு

மதுரை வைகையாற்றில் அழகா் எழுந்தருளிய நிகழ்வில் பங்கேற்ற இந்து அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வைகையாற்றில் அழகா் எழுந்தருளிய நிகழ்வில் முதல்வா் அறிவுறுத்தலின் பேரில் பக்தா்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், பக்தா்கள் அழகரை தரிசிக்கும் வகையிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அழகா் வைகையில் எழுந்தருளிய நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள் உயிரிழந்திருந்தால் அவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றாா் அவா்.