விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

விருதுநகா் மாவட்ட ஆட்சியரகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

விருதுநகா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 1:54 am IST

விருதுநகா் மாவட்ட ஆட்சியரகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தலைமை வகித்த இந்த நிகழ்வில் ‘ஒவ்வொரு வாக்கும் முக்கியம்’ என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. தொடா்ந்து, ‘எனது வாக்கு விற்பனைக்கு அல்ல’, ‘ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்’, ‘நோ்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம்’ என விழிப்புணா்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்குரிமையின் அவசியம், ஜனநாயகத்தின் வலிமை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணா்வுப் பேரணியில், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்வில் அரசு அலுவலா்கள், மாணவா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.