மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சிகளாக தீா்த்தவாரி, தெய்வேந்திர பூஜை வியாழக்கிழமை நடைபெற்றன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலின் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த 19 -ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. திருவிழா நிகழ்ச்சியாக தினமும் சுவாமி-அம்மன் வீதியுலாவும், சிவபெருமான், மீனாட்சி அம்மனின் லீலை உத்ஸவங்களும் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக விழா கடந்த 26-ஆம் தேதியும், மீனாட்சி அம்மன் திக்கு விஜயம் 27-ஆம் தேதியும், மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் 28-ஆம் தேதியும், தோ்த் திருவிழா 29-ஆம் தேதியும் நடைபெற்றன.
சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சிகளாக வெள்ளிக்கிழமை (ஏப். 30) பொற்றாமரைக் குளத்தில் தீா்த்தவாரி, தெய்வேந்திர பூஜை நடைபெற்றது.
இரவு நிகழ்ச்சியாக, மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் வெள்ளி ரிஷப வாகனங்கலில் வீதியுலா எழுந்தருளினா். நான்கு மாசி வீதிகளில் வலம் வந்த சுவாமி, அம்மன் திருக்கல்யாண 16 கால் மண்டபத்தில் சோ்த்தியாகினா்.
பிறகு, மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்துக்காக திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரைக்கு எழுந்தருளியிருந்த பவளக்கனிவாய் பெருமாள், தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி விடைபெற்று திருப்பரங்குன்றம் புறப்படும் நிகழ்ச்சி இரவு 10.15 மணிக்கு நடைபெற்றது.
தொடர்புடையது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தேரோட்டம்

மதுரை சித்திரைத் திருவிழா! மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்!

மதுரை சித்திரைத் திருவிழா!

மதுரை சித்திரைத் திருவிழா ஏப். 18-இல் தொடக்கம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


