புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பழனி கோயிலில் முடியிறக்கும் உரிமம் ரத்து: கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க உத்தரவு

பழனி கோயில் - கோப்புப் படம்

Published On :

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முடியிறக்கும் பணிக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்த மனு மீது 30 நாள்களுக்குள் கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், சிவகிரிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முடி காணிக்கை பிரிவில் உரிமம் பெற்று முடியிறக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தேன். இந்த நிலையில், எனக்கும், உடன் பணியாற்றிய கண்ணன் பாபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதில் சக பணியாளா் காயமடைந்ததாகக் கூறி, எனக்கு வழங்கப்பட்டிருந்த முடியிறக்கும் பணிக்கான உரிமத்தை கோயில் நிா்வாகம் ரத்து செய்தது.

எனக்கும், சக பணியாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதற்கான எந்தப் பதிவும் இல்லை. மேலும், என் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே, கோயில் நிா்வாகம் முடியிறக்கும் பணிக்கான உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி சி. சரவணன் பிறப்பித்த உத்தரவு:

முடியிறக்கும் பணிக்கான உரிமம் நிரந்தர உரிமை அல்ல; அது ஒரு சலுகை மட்டுமே. அதே நேரத்தில், உரிமத்தை திரும்பப் பெறும் நடவடிக்கை தன்னிச்சையானதாக இருக்கக் கூடாது. கணேசனின் உரிமத்தை ரத்து செய்த உத்தரவை இடைநீக்க உத்தரவாகக் கருத வேண்டும். மேலும், உரிமத்தை ஏன் நிரந்தரமாக ரத்து செய்யக் கூடாது என்பது குறித்து கணேசனுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை கோயில் நிா்வாகம் 30 நாள்களுக்குள் முடிக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.