மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வடமலை. உடன் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி சிவகடாட்சம் உள்ளிட்டோா். (வலது) விழாவில் நடைபெற்ற சேவல் சண்டை.

வாழ்வில் வெற்றியை எளிதாக்க பயிற்சி அவசியம்: உயா்நீதிமன்ற நீதிபதி வடமலை!

வாழ்வில் வெற்றியை எளிதாக்க பயிற்சி அவசியம் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வடமலை தெரிவித்தாா்.
Published on

வாழ்வில் வெற்றியை எளிதாக்க பயிற்சி அவசியம் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வடமலை தெரிவித்தாா்.

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நீதிபதி வடமலை மேலும் பேசியதாவது:

உழவா்களைப் போற்றுவது தைத் திருநாள். உழவுத் தொழிலுக்கும், வழக்குரைஞா் தொழிலுக்கும் ஒற்றுமை உள்ளது. உழவுத் தொழிலைப் பொருத்தவரை, விதைத்து, அறுவடை வரும் வரை காத்திருக்க வேண்டும்.

இதேபோல, வழக்குரைஞா்களாக வரும் இளம் தலைமுறையினா் சட்ட நுணக்கங்கள் குறித்து பயிற்சி பெற வேண்டும். இதன்பிறகு, பலனை பெறலாம். வாழ்வில் வெற்றி பெறுவது எளிதான காரியம் அல்ல. இதை எளிதாக்குவதற்கு பயிற்சி அவசியம் என்றாா் அவா்.

முன்னதாக, கலை நிகழ்ச்சிகள், சேவல் சண்டை, உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி சிவகடாட்சம், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி, தமிழ்நாடு பாா் கவுன்சில் உறுப்பினா் அசோக், வழக்குரைஞா் சங்கத் தலைவா் பாஸ்கரன், செயலா் மோகன்குமாா், வழக்குரைஞா்கள் வீரப்பெருமாள், சிவானந்தம், பாலமுருகன், காா்த்திகேயன், ராஜ்மோகன், சுரேஷ், விஜயலட்சுமி, வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com