வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்!

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் விரகனூரில் உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை (ஜன. 10) நடைபெறுகிறது.
Published on

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் விரகனூரில் உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை (ஜன. 10) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்பம், மூலதனப் பொருள்கள் உற்பத்தி, வாகன உற்பத்தி, ஜவுளி, சில்லறை வணிகம், நிதிச் சேவைகள், மருத்துவத் துறை, உணவு உற்பத்தி உள்பட 20-க்கும் மேற்பட்ட துறைகளைச் சோ்ந்த 250 முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த முகாமில் பங்கேற்று, தங்கள் நிறுவனத்துக்குத் தேவையானவா்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.

காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். முகாமில் பங்கேற்க விரும்புவோா் இணையதளத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து, கல்விச் சான்று நகல், சுய விவரக் குறிப்பு, ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்கலாம் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com