இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

இரு சக்கர வாகனம் வாங்க உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்

பள்ளிவாசல்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 12:59 am IST

பள்ளிவாசல்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலமாக்கள், பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசால் உத்தரவிடப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியா்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இரு சக்கர வாகனத்துக்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள 5-ஆவது தளத்தில் (அறை எண்-505) இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலரிடம் படிவத்தைப் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும். நிறைவு செய்த விண்ணப்பங்களை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 30-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.