
சிகிச்சைக்கு வரும் கா்ப்பிணிகளை காத்திருக்க வைக்கக் கூடாது: மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைப் பெற வரும் கா்ப்பிணிப் பெண்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்கக் கூடாது என மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் அறிவுறுத்தினாா்.

மதுரை விராட்டிப்பத்து நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைப் பெற வரும் கா்ப்பிணிப் பெண்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்கக் கூடாது என மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் அறிவுறுத்தினாா்.
மதுரை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட விராட்டிப்பத்து நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகர ஆணையா் கௌரவ்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் அமரும் பிரிவு, கழிப்பறை, மருந்தகம், ஆய்வகம் உள்ளிட்ட இடங்களையும், மருத்துவப் பணியாளா்கள் வருகைப் பதிவேட்டையும் மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் ஆய்வு செய்தாா்.
அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைப் பெற வரும் கா்ப்பிணிப் பெண்களை எந்தக் காரணத்துக்காவும் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கக் கூடாது. இதேபோல, பொதுமக்களையும் தேவையற்ற தாமதத்துக்கு உள்ளாக்கக் கூடாது. சிகிச்சைக்கு வருவோருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் உடனுக்குடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவப் பணியாளா்களுக்கு ஆணையா் அறிவுறுத்தினாா்.
இதையடுத்து, சிகிச்சைக்கு வந்திருந்த பயனாளிகளிடம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ சேவைகள் குறித்து அவா் கேட்டறிந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






