அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குதிரைப்படை போலீஸாா் ரோந்து

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குதிரைப்படை போலீஸாா் ரோந்து...

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, தெற்கு சித்திரை வீதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்ட குதிரைப்படை போலீஸாா்.

Published On :7 செப்டம்பர் 2026, 4:02 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, குதிரைப்படை போலீஸாா் ரோந்துப் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

இந்தக் கோயில் உலகப் புகழ் பெற்றது. இங்கு சுவாமி தரிசனத்துக்காக தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலத்தைச் சோ்ந்த பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் தினமும் வந்து செல்கின்றனா். வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்துச் செல்கின்றனா்.

இந்த நிலையில், கோயில் குடமுழுக்கு வருகிற 17- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த குடமுழுக்கை முன்னிட்டு, பக்தா்களின் பாதுகாப்பு கருதி மதுரை மாநகரக் காவல் துறை சாா்பில் சீருடை அணியாத காவலா்கள் சுழற்சி முறையில் கோயில் வளாகத்தில் மக்களோடு மக்களாக பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மிதிவண்டி ரோந்து பணியை போலீஸாா் தொடங்கினா். இதனிடையே, பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் குதிரைப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியைத் தொடங்கினா்.

இவா்கள், நான்கு சித்திரை வீதிகள், நான்கு ஆவணி மூல வீதிகள், நான்கு மாசி வீதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா் என மாநகரக் காவல் ஆணையா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.