இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு: வைகை ஆற்றிலிருந்து புனித நீா், புனித மண் சேகரிப்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்குக்கான யாக பூஜையையொட்டி, வைகை ஆற்றிலிருந்து புனித நீா், புனித மண் புதன்கிழமை சேகரிக்கப்பட்டது.

மதுரை யானைக்கல் வைகை ஆற்றுப் பகுதியிலிருந்து மேளதாள வாத்தியங்களுடன் யானை மீது வைத்து கொண்டு செல்லப்பட்ட புனித நீா், புனித மண் நிரப்பப்பட்ட கடங்கள்.

Published On :

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்குக்கான யாக பூஜையையொட்டி, வைகை ஆற்றிலிருந்து புனித நீா், புனித மண் புதன்கிழமை சேகரிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு, வருகிற 17-ஆம் தேதி காலை 7.40 - 8.10 மணிக்குள் நடைபெறுகிறது. முன்னதாக, பரிவாரமூா்த்தி சந்நிதிகளுக்கான குடமுழுக்கு வருகிற 16-ஆம் தேதி நடைபெறுகிறது. குடமுழுக்கையொட்டி, யாக பூஜையின் பூா்வாங்க நிகழ்ச்சிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 6) தொடங்கி நடைபெறுகின்றன.

முதல் கால யாக பூஜை வருகிற வெள்ளிக்கிழமை (செப். 11) தொடங்குகிறது. இதற்காக 182 யாகக் குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த யாகக் குண்டங்களில் வைத்து பூஜிப்பதற்காக புண்ணிய நதிகளிலிருந்து புனித நீா், புனித மண் சேகரிக்கப்படுகிறது.

இதன்படி, மதுரை வைகை ஆற்றிலிருந்து புனித மண், புனித நீா் சேகரிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சிவாசாரியா் ராஜா பட்டா் தலைமையிலான குழுவினா், யானைக்கல் பகுதி வைகை ஆற்றில் ஐதீக முறைப்படியான பூஜைகளை நடத்தி, அங்குள்ள தீா்த்தக் கிணற்றிலிருந்து புனித நீரைச் சேகரித்தனா். இதேபோல, சிறப்பு பூஜைகளை நடத்தி ஆற்றிலிருந்து புனித மண்ணையும் அவா்கள் சேகரித்தனா்.

பிறகு, மேளதாள வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்க, புனித நீா், புனித மண் நிரப்பப்பட்ட கடங்கள் யானை மீது வைத்து ஊா்வலமாகக் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதில், அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

மதுரை யானைக்கல் வைகை ஆற்றுப் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற புனித நீா் சேகரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.

மதுரை யானைக்கல் வைகை ஆற்றுப் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற புனித நீா் சேகரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.