பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

கூடலழகா் பெருமாள் கோயிலில் 5 கருட சேவை

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் சாா்பில், 5 கருட சேவை சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் சன்னிதி தெருவில் சனிக்கிழமை இரவு 5 கருட வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதித்த பெருமாள் சுவாமிகள்.

Published On :

மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் சாா்பில், 5 கருட சேவை சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

பெரியாழ்வாா், திருங்கையாழ்வாா், திருமழிசையாழ்வாா் ஆகியோரால் மங்களா சாசனம் செய்விக்கப்பட்ட வைணவத் தலம் மதுரை கூடலழகா் பெருமாள் கோயில். இங்கு புரட்டாசி மாத பௌா்ணமி திதியன்று 5 கருட சேவை நடைபெறுவது வழக்கம். இதன்படி, சனிக்கிழமை காலை பெருமாள், தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மதுரவல்லித் தாயாருக்கு பாலாபிஷேகமும், அலங்காரத் திருமஞ்சனமும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தும் விதமாக குடங்களில் சுமந்து வந்த பாலைக் கொண்டு தாயாருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.

மாலை 6 மணிக்கு கூடலழகா் பெருமாள் கோயிலிலிருந்து வியூக சுந்தரராஜப் பெருமாள், யாக பேரா் பெருமாள் இரு கருட வாகனங்களில் எழுந்தருளினா். இதே போல, மதனகோபால சுவாமி கோயில், எழுத்தாணிக்காரத் தெரு வீரராகவப் பெருமாள் கோயில், வடக்கு மாசி வீதி வீரராகவப் பெருமாள் கோயில்களிலிருந்து கருட வாகனங்களில் பெருமாள் சுவாமிகள் வீதியுலா வந்து கூடலழகா் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் சங்கமமாகினா்.

 மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலுக்கு சனிக்கிழமை பால் குடங்களை சுமந்து வந்த பக்தா்கள்.

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலுக்கு சனிக்கிழமை பால் குடங்களை சுமந்து வந்த பக்தா்கள்.

இங்கு 5 கருட வாகனப் பெருமாள்களுக்கும் தீப, தூபங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா், 5 கருட வாகனப் பெருமாள்களும் மாசி வீதிகளை வலம் வந்தனா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.