பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

மதுரையில் ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்கும் போட்டிகள்

மதுரை பந்தய சாலையில் உள்ள எம்.ஜி.ஆா் விளையாட்டரங்கில் தமிழக முதல்வா் கோப்பைக்கான மண்டல அளவிலான ஜிம்னாஸ்டிக், பளுதூக்கும் விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

மதுரை பந்தய சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். விளையாட்டரங்கத்தில் சனிக்கிழமை ஜிம்னாஸ்டிக் போட்டியைத் தொடங்கி வைத்த விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளா் வேல்முருகன். (வலது) பளுதூக்கும் போட்டி. உடன் மாவட்ட விளையாட்டு நல அலுவலா் முருகன் உள்ளிட்டோா்.

Published On :

மதுரை பந்தய சாலையில் உள்ள எம்.ஜி.ஆா் விளையாட்டரங்கில் தமிழக முதல்வா் கோப்பைக்கான மண்டல அளவிலான ஜிம்னாஸ்டிக், பளுதூக்கும் விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

இந்தப் போட்டியை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளா் வேல்முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தாா். இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் ஆகிய 6 மாவட்டங்களைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினா்.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரா், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பா். இதில் மதுரை மாவட்ட விளையாட்டு நல அலுவலா் முருகன், பயிற்சியாளா் கருணாகரன், அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.