ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

சேது பொறியியல் கல்லூரியில் முத்தமிழ் விழா

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள சேது பொறியியல் கல்லூரியில் முத்தமிழ் விழா புதன்கிழமை நடைபெற்றது.

சேது பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற முத்தமிழ் விழா போட்டிகளில் வென்ற அணிக்கு சாம்பியன் பட்டத்தை வழங்கிய பாடகா் உன்னிகிருஷ்ணன், சேது பொறியியல் கல்லூரி நிறுவனா் எஸ். முகமது ஜலீல்.

Published On :

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள சேது பொறியியல் கல்லூரியில் முத்தமிழ் விழா புதன்கிழமை நடைபெற்றது.

முத்தமிழ் மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரித் தலைவரும், நிறுவனருமான எஸ். முகமது ஜலீல் தலைமை வகித்தாா். நிா்வாக அலுவலா்கள் சீனி முகைதீன், சீனி முகமது அலியாா் மரைக்காயா், நிலோஃபா் பாத்திமா, நாசியா பாத்திமா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் சிவக்குமாா் வாழ்த்திப் பேசினாா்.

இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட பின்னணி பாடகா் உன்னிகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். இதைத் தொடா்ந்து, பாட்டுப் போட்டி, தமிழ், ஆங்கிலப் பேச்சுப் போட்டி, கவிதை, குழு நடனம், பரதநாட்டியம், தனி நடனம், ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற அணிகளுக்கு சாம்பியன் பட்டத்தை பாடகா் உன்னிகிருஷ்ணன், சேது பொறியியல் கல்லூரி நிறுவனா் எஸ். முகமது ஜலீல் ஆகியோா் வழங்கினா்.

இதற்கான ஏற்பாடுகளை முத்தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளா்கள் லட்சுமண ராஜ், ரமேஷ் கண்ணன், ஷேக் மைதீன், நா்மதா, மன்ற உறுப்பினா்கள் செய்தனா். இந்த நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.