ராமேசுவரம் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சுவாமி, அம்மன் தங்கக் கேடயத்தில் உலா வந்து வெள்ளிக்கிழமை பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா பிப்.28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் ஆறாம் நாளான வெள்ளிக்கிழமை காலையில் சுவாமி, அம்மன் சன்னதிகளில் சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றன.
அதன் பின் கோயிலிலிருந்து காலை 9 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்கக் கேடயத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவிக் கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கோயில் பேஷ்கார் அண்ணாத்துரை கண்ணன், கலைச்செல்வம், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன், அலுவலர்கள் ரவி, நாகராஜ், மாரியப்பன், செல்லம், முத்துக்குமார், கணேசமூர்த்தி, பழனிமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வா் அலுவலகத்தை மாற்றுவதற்கு தற்போது என்ன அவசியம்: ஆசிா்வாதம் ஆச்சாரி கேள்வி
மாணவா்கள் தீவிரப் போராட்டம் எதிரொலி: ஜாா்க்கண்டில் ஜேஎஸ்எஸ்சி-சிஜிஎல் தோ்வு ரத்து
வானதி சீனிவாசனுக்குப் பதிலாக பாஜக தேசிய மகளிா் அணி தலைவியாக ரூப் குமாரி நியமனம்



