முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முதுகுளத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மலேசியா பாண்டி, நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுரேஷ், கூடுதல் உதவி தொடக்க அலுவலர் ராமநாதன்,அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் தர்மராஜ், முன்னாள் பேரூராட்சிதுணைத் தலைவர் பாசில் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், 30 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தனது சொந்த நிதியில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டுப் பொருள்கள், பொழுதுபோக்கும் வரைபடங்கள், சிறுகுழந்தைகள் விளையாடக்கூடிய பந்து வகைகள், மனவளப்பயிற்சி பெறும் பொருள்களை மலேசியா பாண்டி வழங்கினார்.
விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோசப் விக்டோரியராணி வரவேற்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொகுதி மேம்பாட்டுக்குழுச் செயலாளர்துரைப்பாண்டியன்,பொருளாளர் லெட்சுமணன்,துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.