ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
ராமநாதபுரம் ரமலான் நகரில் வசிக்கும் அமீர் அலி மகள் உம்மன் கிபாயா(10). இவர் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு, கடந்த அக். 28 ஆம் தேதி மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்தார். இது குறித்து ராமநாதபுரம் சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குநர் குமரகுருபரன் கூறுகையில், சிறுமி வைரஸ் காய்ச்சலால் தான் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.