இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முதுகுளத்தூர் எம்எல்ஏ உதவி

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும்  மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முதுகுளத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:16 am

DIN

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும்  மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முதுகுளத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மலேசியா பாண்டி, நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வி  இயக்க மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுரேஷ், கூடுதல் உதவி தொடக்க அலுவலர் ராமநாதன்,அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் தர்மராஜ், முன்னாள் பேரூராட்சிதுணைத் தலைவர் பாசில் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  இதில், 30 மாற்றுத்திறனாளி  குழந்தைகளுக்கு தனது சொந்த நிதியில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டுப் பொருள்கள், பொழுதுபோக்கும் வரைபடங்கள், சிறுகுழந்தைகள் விளையாடக்கூடிய பந்து வகைகள், மனவளப்பயிற்சி பெறும் பொருள்களை மலேசியா பாண்டி வழங்கினார்.
விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோசப் விக்டோரியராணி வரவேற்றார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொகுதி மேம்பாட்டுக்குழுச் செயலாளர்துரைப்பாண்டியன்,பொருளாளர் லெட்சுமணன்,துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.