அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருவாடானை தாலுகாவில் பயிர்காப்பீடு இழப்பீடு கிடைக்கவில்லை: கடன் பெற்ற விவசாயிகள் புகார்

திருவாடானை தாலுகா முழுவதும் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகள், பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கப்படாததால் கவலை அடைந்துள்ளனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:55 am

DIN

திருவாடானை தாலுகா முழுவதும் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகள், பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கப்படாததால் கவலை அடைந்துள்ளனர்.
   திருவாடானை தாலுகாவில் சுமார் 31 தொடக்க வேளாண் கூட்டுற வு கடன் சங்கங்கள் உள்ளன. இவற்றில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினராகி சம்பா பருவ சாகுபடிக்கு கடன் பெற்று உள்ளனர்.
  கடந்த ஆண்டு இந்த விவசாயிகள் பயிர் காப்பீடு தொகை செலுத்தியிருந்தனர். இந்நிலையில் கடன் பெறாத விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வருவாய் கிராமத்திற்கு தகுந்தவாறு வழங்கப்பட்டுள்ளது.
  ஆனால் கடன் பெற்ற விவசாயிகளுக்கு  இது  வரை பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித பயனும் இல்லை.
  இந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்ய மாவட்ட நிர்வாகம் கடைசி தேதி நவம்பர் 30 ஆம் தேதி என்று அறிவித்துள்ள நிலையில் எனன செய்வது என்று புரியாமல் உள்ளதாக விவசாயிகள்  தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.