மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கல்யாணம்

திருவாடானை சிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

திருவாடானை சிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத் திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
   ராமநாதபுரம்சம்ஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியபட்ட இக்கோயிலில் ஆடிப்பூரத்திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
அன்றில் இருந்து  ஒவ்வோர் நாளும் அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி  வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் முக்கிய நிகழ்சியான தேரோட்டம் கடந்த  12 ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.  மாலை மாற்றும் வைபவத்தைத் தொடர்ந்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக அம்மன் புஷ்ப பல்லக்கில் சயன அலங்காரத்தில்  வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மொய் எழுதும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.