மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ராமநாதபுரத்தில் 5 இடங்களில் அஞ்சலக வங்கிச் சேவை: நாளை தொடக்கம்

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை (செப்.1) முதல் தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட 5 அஞ்சலகங்களில் வங்கிச் சேவை தொடங்கப்பட உள்ளது. 

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை (செப்.1) முதல் தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட 5 அஞ்சலகங்களில் வங்கிச் சேவை தொடங்கப்பட உள்ளது. 
இது தொடர்பாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எம்.வீரபுத்ரன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
   நாட்டில் அஞ்சலக வங்கிச் சேவையை பிரதமர் நரேந்திர மோடி  புதுதில்லியில் சனிக்கிழமை துவக்கி வைக்கிறார். ராமநாதபுரம் கோட்டத்தில் 306 அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் முதல் கட்டமாக ராமநாதபுரம் தலைமை அஞ்சலகம், உச்சிப்புளி துணை அஞ்சலகம், ரெட்டையூரணி, மண்குண்டு, நாகாச்சி ஆகிய 5 அஞ்சலகங்களில் வங்கிச் சேவை தொடங்கப்படுகிறது. 
இதன் துவக்க விழா ராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மு.மணிகண்டன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், மன்னர் குமரன் சேதுபதி உள்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். 
அஞ்சலகங்களில் வங்கிக் கணக்கை துவங்கிட அறிமுக நபரோ, இட்டு வைப்புத் தொகையோ தேவையில்லை. ஆதார்  எண்  மட்டுமே போதும். தபால்காரர்  வீட்டு  வாசலுக்கே வந்து கணக்கைத் துவக்கித் தருவார். இதற்கு சேவைக்கட்டணம் கிடையாது. பணம் எடுக்கவும் செலுத்தவும் வேண்டுமெனில் இணையதளம் மூலமாகவோ அல்லது செல்லிடப்பேசிய செயலி மூலமாகவோ முந்தைய நாளே தெரிவிக்க வேண்டும். 
அதனைப் பார்த்து வாடிக்கையாளர் கேட்ட தொகையை தபால்காரர் தங்கள் இருப்பிடத்தை தேடி வந்து  தருவார். வீட்டிற்கே வந்து பணப் பரிவர்த்தனை செய்தால் மட்டும் ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும். 
அரசு மானிய உதவித்தொகை பெறுதல், வெளிநாட்டிலிருந்து அனுப்பபடும் பணத்தைப் பெறுதல், காப்பீட்டுத்தொகை பெறுதல், கடன்தொகையை செலுத்தும் வசதி, மின்னணு பணம் செலுத்தும் வசதி உள்பட பல சேவைகளை இந்த வங்கி வழங்குகிறது.கியூ.ஆர்.கோடு அட்டையை மின்னணு பரிமாற்றத்துக்காக பெற்றுக் கொள்ளலாம். 
வங்கிக் கணக்கு எண்ணையோ அல்லது கடவுச்சொல்லையோ மனப்பாடம் செய்து வைத்திருக்கத் தேவையில்லை. வாடிக்கையாளர் தனது கைரேகையையே சான்றுறுதியாக வைத்துக் கொள்ளலாம். இது பற்றிய மேலும் விபரங்களுக்கு 7738062873 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என எம்.வீரபுத்ரன் தெரிவித்தார். 
  பேட்டியின் போது உதவி கோட்ட கண்காணிப்பாளர்  விஜயகோமதி உடன் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.