கைத்தறி நெசவாளர்களுக்கும், மீனவர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஆர். மோதிலால் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சி.சரவணன், கைத்தறி பிரிவு மாவட்ட துணைத் தலைவர் எம்.என்.சேகர், என்.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.ஜெயப்பிரகாஷ், ஆர்எஸ்எஸ். பிரமுகர் கே.ஆர்.கெங்காதரன், பாரதிய மீனவர் சங்க மாநில துணைச் செயலாளர் என்.மதியழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், கைத்தறி நெசவாளர்களுக்கும், மீனவர்களுக்கும் தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதியகத்தை உருவாக்க வேண்டும், 60 வயது நிறைவுபெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் நிபந்தனையற்ற ஓய்வூதியம், மாதம் குறைந்த பட்சம் ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், முத்ரா திட்டத்தின் கீழ் அனைத்து தொழிலாளர்களுக்கும் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், தொழிற் கல்வி முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும், நெசவாளர்களுக்கு கிடைக்க வேண்டிய தள்ளுபடி மானியத்தை கால தாமதமின்றி வழங்க வேண்டும், நெசவாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

அம்புஜா சிமெண்ட்ஸ் முதல் காலாண்டு லாபம் 36% சரிவு!

ரயில் பயணிகளுக்கு... தத்கல் டிக்கெட் முன்பதிவில் ‘டோக்கன்’ முறை! எப்போது தெரியுமா?

தாமாகவே வருகைப் பதிவு செய்யும் பள்ளி மாணவர்கள்! ஆசிரியைக்கு குவியும் பாராட்டு!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


