கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

பேருந்துக்காக காத்திருந்த இளைஞரை தாக்கியவர் கைது

பரமக்குடியில் பேருந்துக்காக காத்திருந்த இளைஞரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On :26 ஜூன் 2018, 6:48 am IST

பரமக்குடியில் பேருந்துக்காக காத்திருந்த இளைஞரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 எமனேசுவரம் வைகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் சங்கர்குமார் (18). இவர் வெளியூர் செல்ல அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த புதுநகர் பகுதியில் வசிக்கும் பாலுச்சாமி மகன் சபரி (28) என்பவர் சங்கர்குமாரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார். இதில் காயமடைந்த சங்கர்குமார் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து எமனேசுவரம் காவல் நிலையத்தில் சங்கர்குமார் அளித்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் முருகநாதன் வழக்குப் பதிந்து சபரியை கைது செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.