நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ராமநாதபுரத்தில் ஜூலை 1 முதல்  பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: ரூ.500 அபராதம் விதிக்கவும் ஆட்சியர் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.நடராஜன்  தெரிவித்துள்ளார்.

Updated On :30 ஜனவரி 2024, 9:35 pm IST

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.நடராஜன்  தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
ராமநாதபுரம் மாவட்டத்தில்  பிளாஸ்டிக் பொருள்கள் மழைநீரை நிலத்தடிக்குள் செல்ல விடாமல் தடை செய்யக் கூடியதாகவும், டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலை உருவாக்கக்கூடிய ஏ.டி.எஸ்.வகை கொசுக்கள் உற்பத்தியாக சாதகமாக வும் உள்ளது. சமீபகாலமாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது.
தமிழக முதல்வர் வரும் 1.1.2019 முதல்  பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்புக்கு வலுச்சேர்க்கும் விதமாக, மாவட்ட மக்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு ஜூலை 1 ஆம்  தேதியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக தடை செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 இதற்கு பொதுமக்களும், வணிகர்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதனை கண்காணிக்க துணை ஆட்சியர் மற்றும் உதவி 
இயக்குநர் நிலையிலானஅலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்னர். இந்த அறிவிப்பை மீறி செயல்படும் வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களிடம்  ஜூலை 15 முதல் முதற்கட்டமாக ரூ.500 அபராதமாக விதிக்கப்படும். அவர்கள் மீண்டும் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதை கண்டறியப்படும். 
ஒவ்வொரு முறையும் ரூ.1000க்கு குறையாமல் அபராதம் விதிப்பதுடன் ஒத்துழைக்க மறுக்கும் வணிகர்களது வணிக உரிமத்தை ரத்து செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.