ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

பள்ளி செல்லா மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு

கமுதியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ், பள்ளி செல்லா மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு பணி சிறப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

கமுதியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ், பள்ளி செல்லா மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு பணி சிறப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 163 கிராமங்களிலும், பள்ளி செல்லா மாற்றுத்திறனாளி குழந்தைகளை கணக்கெடுக்கும் பணியின் சிறப்புக் கூட்டம் கமுதி உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜான்சன்சுகுமார் தேவனேசன்  தலைமையில் நடைபெற்றது.  அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் ரெ.குமார் முன்னிலை வகித்தார். 
 இக்கூட்டத்தில்  அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் ரெ.குமார் பேசியது: கடந்த ஏப். 16 ஆம் தேதியிலிருந்து கணக்கெடுக்கும் பணியில் வட்டார வள மைய பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இப்பகுதியில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கட்டாயம் பள்ளியில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அரசின் உதவிகள் மற்றும் உபகரணங்களால் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும் கல்வி சென்றடைய வேண்டும். இதற்காக மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இதுகுறித்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.