தில்லி போராட்டத்தில் இறந்தவிவசாயிகளுக்கு அஞ்சலி
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில், தில்லியில் நடந்து வரும் போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள அரண்மனை அருகில் அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலா் பி. கல்யாணசுந்தரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலா் கே. களஞ்சியம் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் முருகபூபதி, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் வி. காசிநாததுரை, தாலுகா செயலா் பி. செல்வராஜ், மாா்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா்கள் வெங்கடேஷ், எம். அய்யாத்துரை, சண்முகராஜா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா், கலைஞா்கள் சங்க மாவட்டச் செயலா் ரா. வான் தமிழ் இளம்பரிதி உள்ளிட்ட பலா் மலா் அஞ்சலி செலுத்திப் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

