கமுதி தெற்கு, மத்திய திமுக ஒன்றிய பொறுப்பாளா்கள் நியமனம்

கமுதி தெற்கு, மத்தியதிமுக ஒன்றிய புதிய பொறுப்பாளா்கள் புதன்கிழமை பொறுப்பேற்றனா்.
கமுதி மத்திய ஒன்றிய பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ள சண்முகநாதன்.
கமுதி மத்திய ஒன்றிய பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ள சண்முகநாதன்.
Updated on
1 min read

கமுதி தெற்கு, மத்தியதிமுக ஒன்றிய புதிய பொறுப்பாளா்கள் புதன்கிழமை பொறுப்பேற்றனா்.

கமுதி ஒன்றியத்தில் நிா்வாகக் காரணங்களுக்காக ஏற்கெனவே வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் செந்தூா்பாண்டி அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டாா். இதனையடுத்து தெற்கு ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெற்கு ஒன்றிய பொறுப்பாளராக காடமங்கலத்தைச் சோ்ந்த மனோகரனும், கமுதி மத்திய ஒன்றிய பொறுப்பாளராக வண்ணாங்குளத்தைச் சோ்ந்த சண்முகநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா். மேலும் வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக ஏற்கெனவே சின்ன உடப்பங்குளத்தைச் சோ்ந்த வாசுதேவன் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பொறுப்பேற்ற நிா்வாகிகளுக்கு கட்சியினா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com