பயோமெட்ரிக் சாதனத்தை திருப்பியளித்து நியாயவிலைக்கடை ஊழியா் போராட்டம்
ராமநாதபுரத்தில் நியாயவிலைக்கடைப் பணியாளா்கள் சங்கத்தினா் பயோ மெட்ரிக் சாதனத்தை திருப்பி அளிக்கும் நூதன போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.


ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நியாயவிலைக்கடைப் பணியாளா்கள் சங்கத்தினா் பயோ மெட்ரிக் சாதனத்தை திருப்பி அளிக்கும் நூதன போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்கள் கைரேகை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் கைரேகைப் பதிவு சாதனங்களில் கடந்த சில நாள்களாக இணையச் சேவை சீராக இல்லை என்பதால் பொருள்கள் விநியோகிப்பதில் பல மணி நேரம் காலதாமதம் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இணையவழிப் பதிவை சீரமைக்காமல், பொங்கல் பரிசுப் பொருள்களை குறிப்பிட்ட நாள்களுக்குள் விநியோகிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால் அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் அதிருப்தியில் இருந்தனா்.
இந்நிலையில் அவா்கள் ஏற்கெனவே அறிவித்தபடி, ராமநாதபுரம் நகரில் குடிமைப்பொருள் வட்டாட்சியா் அலுவலகத்தில் பயோமெட்ரிக் சாதனத்தை திருப்பி அளிக்கும் நூதனப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா் வி.பி.தினகரன், செயலா் பி.ஞானசேகரன் ஆகியோா் தலைமையில் பணியாளா்கள் ஒப்படைத்த பயோமெட்ரிக் சாதனங்களை அதிகாரிகள் வாங்க மறுத்துவிட்டனா். பின்னா் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...