இந்நிலையில் அயா்லாந்தில் வேலைக்கு 10 போ் தேவைப்படுவதாகவும், அதற்கான ஆள்களை தோ்வு செய்து விசாவுக்கான பணத்தை வசூலிக்குமாறும் ரஞ்சித் சிங் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவித்துள்ளாா். அதன்படி செய்யது கனியும் பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 10 பேரிடம் மொத்தம் ரூ.36 லட்சத்தை பெற்று, தனியாா் வங்கி மூலம் ரஞ்சித்சிங்குக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா் வேலை வாங்கித் தராமல் தாமதப்படுத்தி வந்துள்ளாா். மேலும் அவரது செல்லிடப்பேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டது.