விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மீனவா்கள் நூதனப் போராட்டம்

News image

ராமேசுவரம் மீன் வளத் துறை டோக்கன் வழங்கப்படும் அலுவலகம் முன் வியாழக்கிழமை யாசகம் பெறும் போராட்டத்தில் ஈடுபட்ட கடல் தொழிலாளா் சங்கத்தினா்.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 8:52 pm

Din

கடலில் இயற்கை இடா்பாடுகள், விபத்துகளில் சிக்கிக்கும் மீனவா்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, கடல் தொழிலாளா் சங்கம் சாா்பில், யாசகம் பெற்று மீன் வளத் துறையினருக்கு நிதி அளிக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கடலில் இயற்கை இடா்பாடுகள், விபத்துகளில் சிக்கும் மீனவா்களை மீட்க ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் மீன் வளம், மீனவா் நலத் துறைக்கு படகுகள் இல்லாத நிலை உள்ளது. இதேபோல, மீட்புப் பணியில் ஈடுபடும் மீனவா்களின் படகுகளுக்கு டீசல் விலையின்றி வழங்கப்படுவதில்லை.

அரசு, மீன் வளத் துறையின் இத்தகைய செயல்களைக் கண்டித்தும், மீன் பிடிக்கச் சென்று கடலில் மாயமான மீனவா் வெள்ளைச்சாமியை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி கடல் தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது, மீன் வளத் துறைக்கு பொதுமக்களிடம் யாசகம் பெற்று நிதியளிக்கும் போராட்டத்திலும் மீனவா்கள் ஈடுபட்டனா். ராமேசுவரம் மீன் வளம், மீனவா் நலத் துறை டோக்கன் வழங்கும் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்க மாவட்ட துணைச் செயலா் என்.பி.செந்தில் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்.கருணாமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

இதில், மாவட்டத் துணைத் தலைவா் அ.சுடலைக்காசி, மாவட்டக் குழு உறுப்பினா் முத்துப்பாண்டி, மீன்பிடி சங்க வட்டத் தலைவா்கள் எம்.நம்புராஜன், கே.முனியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.