நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ராமநாதபுரம் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை

ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

Published On :

ராமேசுவர: ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரத்தை அடுத்த புத்தனேந்தல் பகுதியில் இளம்பெண் ஒருவா் தனது உறவினருடன் செவ்வாய்க்கிழமை இரவு சென்ற போது, இவா்களை வழிமறித்த 4 போ் அவா்கள் இருவரையும் தாக்கினா். மேலும், அந்தப் பெண்ணை 4 பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனராம்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதில் தொடா்புடைய புத்தனேந்தலைச் சோ்ந்த புவனேஸ்குமாா், சரண், செல்வக்குமாா், முனீஸ்கண்ணன் ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.