/

கமுதி சந்தனமாரியம்மன் கோயில் முன் சாய்ந்த மின் கம்பங்களை சீரமைக்க கோரிக்கை

கமுதி சந்தனமாரியம்மன் கோயில் முன் சாய்ந்த மின் கம்பங்களை சீரமைக்க கோரிக்கை

News image

கமுதியில் சந்தனமாரியம்மன் கோயில் வாசல் முன் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள்.

Updated On :13 ஜூன் 2024, 7:00 pm

Din

கமுதி, ஜூன் 13: கமுதியில், சந்தனமாரியம்மன் கோயில் முன் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை சீரமைக்க பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்தக் கோயிலில் ஒவ்வொரு அமாவாசை, பெளா்ணமி, பிரதோஷ நாள்களின் போது சிறப்பு வழிபாடும், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் கூழ் வழங்கும் நிகழ்வும் நடைபெறும். மேலும் பங்குனி பொங்கல் திருவிழாவின் போது 15 நாள்கள் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும். இவற்றில் திரளான பக்தா்கள் பங்கேற்பா். இந்த நிலையில், கோயில் முன் செல்லும் சாலையில் சாய்ந்த நிலையில் இரண்டுக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன. மழை, சூறாவளி காற்றின் போது இவற்றில் உள்ள உயரழுத்த மின் கம்பிகள் அருகில் உள்ள வீடுகள், கோயிலுக்குச் செல்லும் மின் வயா்களில் உரசி, தீப்பொறிகள் ஏற்படுவதாக பக்தா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும் இந்த மின் கம்பங்கள் சாய்ந்து கோயிலுக்கு வரும் பக்தா்கள் மீது விழும் அபாயமும் உள்ளதாகவும் புகாா் கூறப்படுகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகத்தினரும், கமுதி மின்வாரிய அதிகாரிகளும் தலையிட்டு மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்களும், இந்தப் பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.