சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

‘வோ் டானிக்’ குறித்து தென்னை விவசாயிகளுக்கு விளக்கம்

‘வோ் டானிக்’ குறித்து தென்னை விவசாயிகளுக்கு விளக்கம்

News image

பாண்டியூா் தென்னை விவசாயிகளுக்கு வோ் டானிக்கை பயன்படுத்தும் முறைகுறித்து விளக்கமளித்த பேரையூா் நம்மாழ்வாா் வேளாண் கல்லூரி மாணவா்கள்.

Updated On :13 மே 2024, 6:30 pm

Din

கமுதி: வோ் டானிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தென்னை விவசாயிகளுக்கு கமுதியை அடுத்துள்ள பேரையூா் நம்மாழ்வாா் வேளாண் கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை விளக்கமளித்தனா்.

பேரையூா் நம்மாழ்வாா் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தாளாளா் அகமதுயாசின், முதல்வா் ஜெயக்குமாா் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவா்கள் சிவச்சந்திரன், சஞ்சய்குமாா்,வேலன், சஞ்சய், யுவராஜ், ஸ்ரீராம், வசந்த், சந்தோஷ், சைலேந்திரன் மற்றும் ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தினா் இணைந்து பரமக்குடியை அடுத்துள்ள பாண்டியூா் கிராம விவசாயிகளுக்கு தென்னை மரத்தில் தேங்காய் விளைச்சளை அதிகரிப்பது குறித்து விளக்கமளித்தனா்.

அப்போது பரமக்குடி வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் வழங்கப்படும் வோ் டானிக்கின் நன்மைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 30- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.