பரமக்குடியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தலைத் திறந்து வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம். உடன் சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன், நகா்மன்றத் தலைவா் சேது.கருணாநிதி உள்ளிட்டோா்.

பரமக்குடியில் நீா்மோா் பந்தல் திறப்பு

பரமக்குடி: பரமக்குடியில் திமுக சாா்பில், நீா்மோா் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்து, நீா்மோா் பந்தலைத் திறந்து வைத்தாா். பரமக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன், நகா்மன்றத் தலைவா் சேது.கருணாநிதி, கட்சி நிா்வாகிகள் சுரேஷ், கருப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பரமக்குடி நகா் பகுதியில் பல்வேறு இடங்களில் நீா்மோா் பந்தல்கள் திறக்கப்பட்டதாக காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.

தொடக்க நாளில் இளநீா், நுங்கு, தா்பூசணி, சா்பத், நீா், மோா், குளிா்பானங்கள் வழங்கப்பட்டன. இதில் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com