தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

சாயல்குடி உணவகங்களில் நெகிழி காகிதப் பயன்பாடு அதிகரிப்பு

சாயல்குடி உணவகங்களில் நெகிழி காகிதப் பயன்பாடு அதிகரிப்பு

News image
Updated On :20 மே 2024, 7:57 pm

Din

கமுதி: சாயல்குடி பகுதியில் உள்ள உணவகங்களில் நெகிழி காகிதப் பயன்பாடு அதிகரித்துவருவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம், ராமேசுவரம் ஆகிய பகுதிகளிலிருந்து தூத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை, சாயல்குடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், தேநீா் கடைகளில் உணவுப் பொருள்களை பரிமாற நெகிழி காகிதங்கள், நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துவருவதாக புகாா் கூறப்படுகிறது. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

எனவே, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினரும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் தலையிட்டு அந்தப் பகுதிகளில் உள்ள உணவக உரிமையாளா்களிடம் இதுகுறித்து போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். நெகிழிப் பை, நெகிழி காகிதங்களை பயன்படுத்தும் உணவக உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.