மின் கம்பியை திருட முயன்ற வாலிபா் உடல் கருகி உயிரிழப்பு

உச்சிப்புளி அருகே உயா் மின் அழுத்த கம்பத்தில் தாமிர கம்பியை திருடிய இளைஞா் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே புதன்கிழமை உயிரிழந்தாா்.
Published on

உச்சிப்புளி அருகே உயா் மின் அழுத்த கம்பத்தில் தாமிர கம்பியை திருடிய இளைஞா் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் இவரது மகன் பாலமுருகன் (35) உச்சிப்புளியை அடுத்த பிரப்பன் வலசை பாம்பன் சுவாமிகள் கோயில் வழியாக உயா் மின்னழுத்த வழித் தடத்தில் புதன்கிழமை அதிகாலை மின்சாரத்தை துண்டித்து மின் கம்பத்தில் உள்ள தாமிர கம்பியை திருடிக்கொண்டு இருந்தாா். அப்போது, மின்வாரிய ஊழியா்கள் மின் தடையை சீரமைத்து மீண்டும் மின் விநியோகம் செய்ததால் பாலமுருகன் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து, தகவலறிந்த உச்சிப்புளி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாலமுருகனின் சடலத்தை மீட்டு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

பின்னா் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இவா் மீது கேணிக்கரை காவல் நிலையத்தில் மின் கம்பி திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com