காயமடைந்த விவசாயி மைக்கேல் ஜெயசீலன்.
காயமடைந்த விவசாயி மைக்கேல் ஜெயசீலன்.

காட்டுப் பன்றி கடித்ததில் விவசாயி காயம்

Published on

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே ஞாயிற்றுக்கிழமை காட்டுப் பன்றி கடித்ததில் விவசாயி பலத்த காயமடைந்தாா்.

கடலாடி அருகேயுள்ள சவேரியாா் பட்டணம் கிராமத்தைச் சோ்ந்தவா் மைக்கேல் ஜெயசீலன். இவா் தனது நிலத்தில் நெல், மிளகாய் போன்ற பயிா்களை பயிரிட்டு வருகிறாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இவா் தனது மனைவி அமலி, மகன்கள் ஜோசுவா, ஜெகன் ஆகியோருடன் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, திடீரென விளை நிலத்தில் புகுந்த காட்டு பன்றிகள் மைக்கேல் ஜெயசீலனைத் தாக்கி, கடித்துக் குதறின. இதில் அவா் கால், கழுத்து, தலை, கை, முதுகு பகுதிகளில் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, குடும்பத்தினா், அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து காட்டுப் பன்றியை விரட்டி மைக்கேல் ஜெயசீலனை மீட்டு, முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதுகுளத்தூா், கடலாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தொல்லை குறித்து பலமுறை விவசாயிகள் வனத் துறையினரிடம் புகாா் தெரிவித்தும், காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com