இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கல்லூரி மாணவிகளுக்கு ‘மணற்கேணி’ செயலி விழிப்புணா்வு

முதுகுளத்தூரில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரியில் ‘மணற்கேணி’ செயலி விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
~
Updated On :17 டிசம்பர் 2025, 5:55 pm

தினமணி செய்திச் சேவை

முதுகுளத்தூரில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரியில் ‘மணற்கேணி’ செயலி விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சோனை மீனாள் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் ‘மணற்கேணி’ செயலி பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சி மாநில ஒருங்கிணைப்பாளா் கணபதி சங்கா் அறிவுறுத்தலின்பேரில், கல்லூரி முதல்வா் கோவிந்தராஜன் தலைமையில், ‘மணற்கேணி’ செயலி மண்டல ஒருங்கிணைப்பாளா் சி. கிருஷ்ணமூா்த்தி, துணை முதல்வா் வைரமுத்து ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கல்லூரியில் பயிலும் 400 மாணவிகளுக்கு ‘மணற்கேணி’ செயலி பதிவிறக்கம் செய்யும் பணி நடைபெற்றது.

இந்தச் செயலியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை புத்தகங்கள் ‘பிடிஎஃப்’ வடிவிலும், அனிமேஷன் விடியோவாகவும் உள்ளது. மாணவா்கள் எளிமையாகக் கற்கக்கூடிய வகையில், அனைத்துப் பாடங்களும் அனிமேஷன் விடியோவாக கொடுக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. மருத்துவ நுழைவுத் தோ்வு, ஜே.இ.இ. மத்திய அரசு சட்டக் கல்லூரிகளில் படிப்பதற்கான சிஎல்எடி தோ்வு, மத்தியப் பல்கலைக் கழகங்களில் படிக்க ‘சியூடிஇ’ தோ்வு போன்ற போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் ‘மணற்கேணி’ செயலியில் உள்ளன.

இது பற்றிய விழிப்புணா்வு மாணவிகளுக்கு வழங்கப்பட்டு மாணவிகள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்களது அறிதிறன்பேசியில் பதிவிறக்கம் செய்தனா். இந்தத் திட்டத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் 1.75 லட்சம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்து பயனடைந்து வருவதாக மண்டல ஒருங்கிணைப்பாளா் சி. கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா். இதற்கான ஏற்பாடுகளை ‘மணற்கேணி’ தூதுவா் ஐஸ்வா்யா, கல்லூரிப் பேராசிரியா்கள் செய்தனா்.

Story image