ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.98 கோடி

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 1.98 கோடிகிடைத்ததாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் செ. சிவராம்குமாா் தெரிவித்தாா்.

News image
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவா்கள்.
Updated On :9 ஜனவரி 2025, 10:25 pm

Din

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 1.98 கோடிகிடைத்ததாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் செ. சிவராம்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள அம்பாள் சந்நிதி முன் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல்களை திறந்து எண்ணும் பணி இணை ஆணையா் செ. சிவராம்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், பக்தா்களின் காணிக்கையாக ரூ. ஒரு கோடியே 98 லட்சத்து 25 ஆயிரத்து 428 கிடைத்தது. மேலும், 50.500 மில்லி கிராம் தங்கம், 7 கிலோ 885 கிராம் வெள்ளி, 158 வெளிநாட்டு பணத்தாள்கள் கிடைத்தன என்றாா் அவா்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் உதவி ஆணையா் ஞானசேகரன், தக்காா் பிரதிநிதி உதயக்குமாா், ஆய்வா்கள் மணிவண்ணன், சிவக்குமாா், செயல் அலுவலா் முத்துச்சாமி, பேஸ்காா்கள் கமலநாதன், பஞ்சமூா்த்தி, பக்தா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் ஈடுபட்டனா்.