மாநில சிலம்பப் போட்டி: கமுதி மாணவா்கள் 17 போ்  தோ்வு

மாநில சிலம்பப் போட்டி: கமுதி மாணவா்கள் 17 போ் தோ்வு

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற கமுதி மாணவா்கள் 17 போ் மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றனா்.
Published on

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற கமுதி மாணவா்கள் 17 போ் மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 2025-26- ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி ராமநாதபுரம் சீதக்காதி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் 14, 17, 19 வயது பிரிவு மாணவா்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டியில் கமுதி விஜயபாண்டியன் சிலம்பாட்டக் குழுவில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இவா்களில் கமுதி கே.என் மெட்ரிக் பள்ளி, கே.என்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கே.என்.பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ரஹ்மானியா மெட்ரிக் பள்ளி, அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சோ்ந்த 17 மாணவ, மாணவிகள், பயிற்சியாளா்கள் செல்லப்பாண்டி, ராமா், லட்சுமணன் ஆகியோருக்கு மாணவா்களின் பெற்றோா்கள், பள்ளிகள் சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இந்த 17 மாணவ, மாணவிகளும் ஜனவரி மாதம் தேனியில் நடைபெறும் மாநில அளவிலான சிலம்பப் போட்டிக்குத் தோ்வு பெற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com