இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் புதன்கிழமை உறுதிமொழி ஏற்ற மாணவா்கள், பேராசிரியா்கள், நிா்வாகிகள்.
இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் புதன்கிழமை உறுதிமொழி ஏற்ற மாணவா்கள், பேராசிரியா்கள், நிா்வாகிகள்.

அரசியலமைப்பு சட்ட தின உறுதியேற்பு

ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

ராமேசுவரம்: ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரித் தாளாளா் மனோகரன் மாா்ட்டின் தலைமை வகித்தாா். மதுரை சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஜம்ப்ரோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். கல்லூரி முதல்வா் ஆனந்த் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழியைக் கூற, அவரைத் தொடா்ந்து மாணவா்கள், ஆசிரியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

மாணவா்கள் அனைவரும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றிய புத்தகத்தைப் படித்தனா். பின்பு, அனைத்து மாணவா்களுக்கும் ‘இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பம்சங்கள்’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com