ராமேசுவரம் கல்லூரியில் பொங்கல் விழா

ராமேசுவரம் கல்லூரியில் பொங்கல் விழா

ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் மனோகரன் மாா்ட்டின் தலைமை வகித்தாா். முதல்வா் ஆனந்த் முன்னிலை வகித்தாா். ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள், நடைபெற்றன. பொங்கல் பண்டிகை இளைஞா்களுக்கு விழிப்புணா்வு தரும் பண்டிகையா? வெறும் விடுமுறையை கழிக்கும் பண்டிகையா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Dinamani
www.dinamani.com