கருப்புப் பட்டை அணிந்து சுகாதார இயக்க ஒப்பந்தப் பணியாளா்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய சுகாதார இயக்க ஒப்பந்தப் பணியாளா்கள் கருப்புப் பட்டை அணிந்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய சுகாதார இயக்க ஒப்பந்தப் பணியாளா்கள் கருப்புப் பட்டை அணிந்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம், அனைவருக்கும் கல்வி இயக்கம், வளா் இளம் பருவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தேசிய சுகாதார இயக்க ஒப்பந்தப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில் தங்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். இஎஸ்ஐ சலுகை வழங்க வேண்டும். ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்பட 48 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் அவா்கள் கருப்புப் பட்டை அணிந்து தமிழகம் முழுவதும் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் பணிக்கு வந்தனா்.
இதே போல, கமுதி அடுத்துள்ள வட்டார தலைமை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய சுகாதார இயக்க ஒப்பந்தப் பணியாளா்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...