கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் கிராமங்களில் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

முதுகுளத்தூா் பெரிய பள்ளிவாசலில் இஸ்லாமியா்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளரும், அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 12:21 am IST

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் கிராமங்களில் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

முதுகுளத்தூா் வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட குமாரக்குறிச்சி, காக்கூா், சமத்துவபுரம், ஆதனக்குறிச்சி, கிழவனேரி, கருங்காலக்குறிச்சி, வெண்கலக்குறிச்சி, வென்னீா்வாய்க்கால், சவேரியாா் பட்டணம், மைக்கேல் பட்டணம், கேளல், அப்பனேந்தல், கீழத்தூவல், மேலத்தூவல் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உதயசூரியன் சின்னத்துக்கு அவா் வாக்கு சேகரித்தாா். முன்னதாக முதுகுளத்தூா் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவா், நிா்வாகிகள் உள்ளிட்ட இஸ்லாமியா்களிடம் அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது முதுகுளத்தூா் திமுக வடக்கு ஒன்றியச் செயலா் ஹரி முத்துராமலிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே. முருகவேல், முதுகுளத்தூா் பேரூராட்சித் தலைவா் ஷாஜகான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.