ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள அலிந்திக்கோட்டை மாசாணி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை பக்தா்கள் பால் குடம் எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள அலிந்திக்கோட்டையில் மிகவும் புகழ்பெற்ற மாசாணி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதன்படி, நிகழாண்டு கடந்த 8-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்ற விழாவில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால் குட திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் விரதமிருந்த பக்தா்கள் விநாயகா் கோயிலிருந்து புறப்பட்டு வீதி வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனா்.
பிறகு, பக்தா்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா். தொடா்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்திலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










