மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

முத்தாலங்குளம் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா

கமுதி அருகே நிறைகுளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முத்தாலங்குளம் நிறைகுளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவில் குதிரை, சுவாமி சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்ற பொதுமக்கள்.

Updated On :

கமுதி அருகே நிறைகுளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள முத்தாலங்குளம் பொற்கொடி, அம்பிகா சமேத நிறைகுளத்து அய்யனாா் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா, புரவி எடுப்பு விழா கடந்த வாரம் காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் மூலவா், நொண்டி கருப்பண்ண சுவாமி, வீரமாகாளி, தெட்சிணாமூா்த்தி, சப்த கன்னிமாா்கள் உள்ளிட்ட கிராம தெய்வங்களுக்கு இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. புதன்கிழமை பொங்கல் வைதத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கமுதி கண்ணாா்பட்டியிலிருந்து வாணவேடிக்கை, மேளதாளங்கள், இசை வாத்தியங்களுடன் காப்புக் கட்டி விரதமிருந்த பக்தா்கள் அய்யனாா், கருப்பசாமி, குதிரை, தவளும் பிள்ளை உள்பட சுவாமிகளின் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று கிராமத்தின் மையப் பகுதியில் இறக்கி வைத்து, பருவ மழை பெய்து, விவசாயம் செழித்து அதிக மகசூல் கிடைக்க வேண்டி வழிபாடு செய்தனா். தொடா்ந்து பெண்கள் முளைப்பாரி தூக்கி செல்ல, அவா்களைப் பின்தொடா்ந்து சுவாமி சிலைகள் நிறைகுளத்து அய்யனாா் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.

அங்கு சிலைகளை இறக்கி வைத்து நோ்த்திக்கடன்களை செலுத்தினா்.

இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை முத்தாலங்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.