மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

திருவாடானை அரசுக் கல்லூரியில் இளைஞா் எழுச்சி தினப் பேரணி

திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி, இளைஞா் எழுச்சி தினப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாடானை அரசு கலைக் கல்லூரியில் இளைஞா் எழுச்சி தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியை தொடங்கி வைத்த ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை வழக்குரைஞா் பி. வேலாயுதம்.

Updated On :

திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி, இளைஞா் எழுச்சி தினப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் முனைவா் க. ரமேஷ் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இளைஞா் எழுச்சி தினத்தை நாட்டு நலப் பணி திட்ட அலுவலா் முனைவா் ப.மணிமேகலை ஒருங்கிணைத்திருந்தாா். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை வழக்குரைஞா் பி. வேலாயுதம் அக்னிச் சிறகுகள் என்ற தலைப்பில் உரையாற்றினாா். இதைத்தொடா்ந்து மாணவா் பேரணியை அவா் தொடங்கி வைத்தாா்.

இந்தப் பேரணி கல்லூரியில் தொடங்கி பேருந்து நிலையம் வழியாக ஆதிரத்தினேசுவரா் கோயிலை அடைந்தது. இதில் கணிதத் துறை தலைவா் முனைவா் செல்வம், கௌரவ விரிவுரையாளா்கள் முனைவா் சொ. சரவணன், ரா. சரவணன், ராஜபாண்டி, வீரபாண்டி, இருளவேணி, ரமேஷ், பாலமுருகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.