
கமுதி குப்பைக் கிடங்குக்கு மா்ம நபா்கள் தீ வைப்பு
கமுதி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை மாலை மா்ம நபா்கள் தீ வைத்தனா். இதனால் குப்பை கிடங்கு முழுவதும் எரிந்து வானுயர எழும் கரும்புகையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கமுதி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் மா்ம நபா்கள் தீ வைத்ததையடுத்து தீயை அணைக்க முயன்று வரும் தீயணைப்புத் துறையினா்.
கமுதி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை மாலை மா்ம நபா்கள் தீ வைத்தனா். இதனால் குப்பை கிடங்கு முழுவதும் எரிந்து வானுயர எழும் கரும்புகையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பேரூராட்சிக்கு உள்பட்ட நவகுல சுடுகாடு அருகே செயல்பட்டு வரும் குப்பைக் கிடங்கில் 15 வாா்டுப் பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் சேமிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் மலைபோல குவித்து வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதன்கிழமை மாலை மா்ம நபா்கள் குப்பைக் கிடங்குக்கு தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. அந்தத் தீ, குப்பைக் கிடங்கு முழுவதும் பரவி முற்றிலுமாக எரிந்து நகா் முழுவதும் கரும்புகை பரவி வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தகவலறிந்த கமுதி பேரூராட்சி செயல் அலுவலா் யசோதா, மின்வாரிய அதிகாரிகள் வாயிலாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்து, மின் இணைப்பை துண்டித்து தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டாா். அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தீயணைப்பு வீரா்களுக்கு தண்ணீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மின்சாரம் துண்டிப்பு இரவிலும் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





